இந்த புதிய சுவையில் வாழைக்காய் கூட்டு செய்துபாருங்கள். சாதத்திற்கு செம சைடிஷ்ஷாக இருக்கும்.


0

வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உடையதாக இருக்கும். வாழைப்பழம், வாழை இலை, வாழைத்தண்டு வாழைப்பூ ஆகிய அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் உள்ளன. இதில் ஒன்றான வாழைக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான பொரியலை எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

வாழைக்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள் :
பெரிய வாழைக்காய் – 2, கடலைப்பருப்பு – 3 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, பூண்டு 5 பல், எண்ணெய் – 4 ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – 4 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு –அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

முதலில் கடலைப்பருப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பின்னர் கடலைப் பருப்பை குக்கரில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பெருங்காயத் தூள், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து குக்கர் ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், அதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரவென்று இருக்கும் பதத்தில் அரைத்து எடுக்க வேண்டும்.

குக்கரை திறந்து வெந்து வந்துள்ள கடலைப்பருப்புடன், தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துள்ள வாழைக்காய்களை சேர்த்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக விட வேண்டும். இவை நன்றாக வெந்ததும் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.

பிறகு இவற்றை அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். பின்னர் தாளிப்பதற்காக ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பினை சேர்க்கவேண்டும். இவை நன்றாக பொரிந்ததும், இவற்றுடன் இடித்து வைத்துள்ள பூண்டினை சேர்க்கவேண்டும். அதனுடன் நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள 2 பச்சை மிளகாய் ஒரு காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவை அனைத்தையும் சேர்த்து தாளித்த பிறகு, அதனுடன் வேகவைத்துள்ள வாழைக்காய் கூட்டினை சேர்க்கவேண்டும். அவற்றை 5 நிமிடங்கள் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவேண்டும்.

இந்த வாழைக்காய் கூட்டினை சாதத்துக்கு சைடிஷ்ஷாகவோ, அல்லது சாதத்துடன் கலந்து பிசைந்து சாப்பிடவோ செய்தால் தனி சுவையில் இருக்கும். ஒருமுறை இவ்வாறு செய்து சுவைத்துப் பாருங்கள்.

[zombify_post]


Like it? Share with your friends!

0
Social

0 Comments