பாவம், அந்த பசுவுக்கு எதையும் சாப்பிட முடியவில்லை. வாய் முழுதுமாக சிதைந்ததால், அதன் உயிரை காப்பாற்றுவது சிரமம் என்பதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை.
கேரளாவில் யானை வெடி வைத்து கொன்ற விவகாரம் அடுத்து என்ன ஆனது என்றே தெரியவில்லை.. முதலில் அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி வைத்ததாக சொன்னார்கள், விசாரணைக்கு பிறகு தேங்காய்தான் வெடித்தது என்கிறார்கள்.

இவைகளை தாண்டி மத ரீதியான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன... இந்த சம்பவத்குக்கு பிறகு இமாச்சல பிரதேசத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்தனர்..
அந்த பசு ஒரு கர்ப்பிணி... பசிக்காக வந்து கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்..
இதற்கு காரணமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரரையும் கைது செய்தனர். இதற்கு பிறகு திருச்சியில் வெடி வைத்து ஒரு நரியை வேட்டையாடினார்கள்.
நாளுக்கு நாள் மிருகங்கள் சித்ரவதை அதிகமாகி வரும் நிலையில், இன்னொரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒன்று புல்லில் வெடியை வைத்திருந்திருக்கிறார்கள்.. பசு பசிக்காக புல்லை சாப்பிட வந்தபோது, வெடி குண்டு வெடித்ததில், அந்த பசுவின் வாய் சிதறிவிட்டது..
அது ஒரு நாட்டு வெடிகுண்டு என்கிறார்கள்.. இப்போது பசு உயிருக்குப் போராடி வருகிறது. அதன் வாய் முழுதும் ரத்தம் கொட்டி சதை தொங்கியிருந்தது... மாடு வலியால் கத்தியது. இதனை கண்டதும் அந்த மாட்டின் உரிமையாளர் கண்ணையா என்பவர் கதறி கதறி அழுதார்..
உடனடியாக வேப்பங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தெரிவித்தார். இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை யாரோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணை நடக்கிறது.. யார் இந்த காரியத்தை செய்தது என தெரியவில்லை.
0 Comments