ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸ் செலக்சன்.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அதிரடி, விவரம் உள்ளே.


0

விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் 26.07.2021 திங்கட்கிழமை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் (காலை 6 மணி அல்லது 9 மணி) எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் அழைப்புக்கடிதத்துடன் ஆஜராக வேண்டும்.

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத் தேர்வு – 2020 -க்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித்தேர்வு 26.07.2021 முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் 26.07.2021 திங்கட்கிழமை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் (காலை 6 மணி அல்லது 9 மணி) எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் அழைப்புக்கடிதத்துடன் ஆஜராக வேண்டும். விண்ணப்பதாரர்கள் செல்போன்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை தேர்வு நடைபெறும் இடத்தின் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

Covid-19 Negative ரிப்போர்ட் உடன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் இடத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும். தேர்வர்கள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆஜராக வேண்டும்.

[zombify_post]


Like it? Share with your friends!

0
Social

0 Comments